Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மஹிந்தவிற்கும் – ரணிலிற்கும் இடையில் அவசர கலந்துரையாடல்

மஹிந்தவிற்கும் – ரணிலிற்கும் இடையில் அவசர கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தொலைபேசியூடாகவே இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், மதத்தலைவர் ஒருவரின் முயற்சியின் பயனாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வமான எவ்வித தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும், அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv