ஈஸ்டர் தின தாக்குதல்- இதுவரை 293 பேர் கைது
நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இத்தகவலை பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு 178 பேர் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


