Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் !

டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் !

டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் !

மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவோரின் செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் காணி அபிவிருத்தி, சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு அவசர கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளார்.

அதில் , வட பகுதியில் அனுமதி அளிக்கப்படாத இடங்களில் மணல் அகழப்படுவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மணல் அகழ்வு தொடர்பில் தென் பகுதிக்கும் வட பகுதிக்கும் இடையில் வித்தியாசங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள அவர், வட மாகாணத்தில் பரவலாக மணல் திட்டுக்கள் காணப்படுவதால் வீதி அனுமதி இரத்தானது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்தோடு, சட்ட ரீதியாக அனுமதிக்கப்படாத இடங்களில் மணல் அகழ்வில் ஈடுபடுவதினால் சுற்றாடல் பாதுகாப்பிற்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த ஆட்சியின்போது துஷ்பிரயோகங்கள் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாது இருந்த தரப்புக்கள், தற்போதைய அரசாங்கம் மக்கள் நலன்சார்ந்து மேற்கொண்ட தீர்மானங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்து வருவதற்கும் அமைச்சர் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv