Saturday , August 23 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / அமெரிக்கா செல்ல விரும்பும் பயணிகளுக்கு டொனால்டு டிரம்ப் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

அமெரிக்கா செல்ல விரும்பும் பயணிகளுக்கு டொனால்டு டிரம்ப் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கருதி, அந்நாட்டுக்கு வருபவர்களுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிறைய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். தற்போது மீண்டும் புதிய விதிமுறைகளை வெளியிட்டார்.

அதன்படி, விசா இல்லாமல் நுழையும் சலுகையை பெற விரும்பும் 38 நாடுகளை சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்குள் நுழைய பயண அனுமதி பெற வேண்டும். தங்கள் நாடுகளை கடந்து அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகளை அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அளித்த தகவல்கள் அடிப்படையில் அவர்களை பரிசோதித்து அனுப்ப வேண்டும்.

விசா காலத்தை தாண்டி, அமெரிக்காவில் தங்குவதை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அப்படி அதிக காலம் தங்கி இருப்பவர்கள், எதிர்காலத்தில் விசா இல்லாமல் நுழையும் சலுகையை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv