நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? உலக நாயகன், நடிகர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ஆளும் கட்சியில் நடக்கும் ஊழல்களை ட்விட்டரில் விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்களை சந்தித்து தீவிர அரசியலில் இறங்குவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்தது வரும் பிப்ரவரி 21-ம் தேதி ராமேஷ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.
இதற்கிடையே,சமீபத்தில் தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல், நமது இலக்கு கஜானாவை நோக்கியில்லை என்று கூறியுள்ளார். இந்தநிலையில், கமல்ஹாசனின் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளது. சினிமா துறையில் தனது நடிப்புத்திறமையால் உச்சத்தில் இருக்கும் கமலஹாசனுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
உலக நாயகன் கமலஹாசன், கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது இவரின் நிகரச் சொத்து மதிப்பு 18 மில்லியன் டாலர், அதாவது 140 கோடி ரூபாயாகும்.
கமலஹாசன், கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க,ரூபாய் 40 கோடியை சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று தரவுகள் கூறுகின்றன. இவர் 30 கோடி ரூபாய் அளவுக்கு, முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது இன்னோவா, ஆடி, ஹம்மர் மற்றும் லிமோயூசினி என 4 ஆடம்பர கார்களைப் பயன்படுத்தி வருகிறார்.
கமல்ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷராஹாசன் என இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவர்களும் திரைப்படங்கள் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.