Monday , October 20 2025
Home / முக்கிய செய்திகள் / ஞாபகமறதி நோய் குணமாகும்வரை ரவியை வெளிநாடு செல்லவிடாதீர்! – ஜனாதிபதியிடம் கம்மன்பில வேண்டுகோள்

ஞாபகமறதி நோய் குணமாகும்வரை ரவியை வெளிநாடு செல்லவிடாதீர்! – ஜனாதிபதியிடம் கம்மன்பில வேண்டுகோள்

தனக்கு எதுவுமே ஞாபகமில்லை என சகட்டுமேனிக்கு சாதித்துவரும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஏற்பட்டிருக்கும் ‘டிமென்ஷியா’ எனும் ஞாபகமறதி நோய் குணமாகும்வரை அவரை வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளுக்கோ அல்லது ஏனைய விவகாரங்களுக்கோ அனுப்பவேண்டாம் என்று புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ள மேலதிக விவரங்கள் வருமாறு:-

“அர்ஜுன் அலோசியஸின் கைப்பேசியிலிருந்து ரவி கருணாநாயக்கவுக்கு ‘ரவி.கே. எம்.பி.’ என்ற குறியீட்டுடன் அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்திகள் தனக்கானவை அல்ல என ஆணைக்குழுவின் முன்னிலையில் ரவி தெரிவித்திருக்கின்றார்.

நமது நாடானுமன்றத்திலுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ‘ரவி’ என்ற முதற்பெயருடன் ஆரம்பித்து ‘கே’ என்ற குடும்பப் பெயரின் முதலெழுத்தில் முடிவடையும் பெயரைக்கொண்டவர் ‘ரவி கருணாநாயக்க’ மாத்திரமே என்பதை சிறு குழந்தை கூட சொல்லும்.

எனவே, தனது பெயரையே மறந்துபோயிருக்கும் ரவி கருணாநாயக்கவை வெளிநாடுகளுக்கு இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சராக அனுப்புவது புத்திசாலித்தனமல்ல. அவ்வாறு அவரை அனுப்பினால் வெளிநாட்டு மாநாடுகளிலோ அல்லது ஏனைய நிகழ்வுகளிலோ தான் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது அவருக்கு மறந்துபோகலாம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv