தமிழகத்தில் கோவில்களை சந்தைக் கடைகளாக மாற்ற வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்தப் பகுதிகளைப் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
தமிழகத்தில் தொடர்ந்து கோவில்கள் பல வகைகளில் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக குற்றம்சாட்டிய அவர், பூட்டப்பட்டிருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் விரிசல் இருக்கிறதா?, என உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் எதற்கு 115 கடைகள், என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் வழிபாட்டு பொருட்களை, கோவில் நிர்வாகமே குறைவான விலைக்கு விற்க வேண்டும், என்றும் வலியுறுத்தினார். மேலும், கோவில்களை சந்தை கடைகளாக ஆக்க கூடாது, என்றும் கேட்டுக்கொண்டார்.