Sunday , August 24 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / வாயை விட்டு மாட்டிக்கொண்ட எச்.ராஜா

வாயை விட்டு மாட்டிக்கொண்ட எச்.ராஜா

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான தகவல் ஒன்றை கூற, அவர் தீக்குளிப்பாரா என திமுக நிர்வாகி ஒருவர் அவருக்கு டுவிட்டரில் சவால் விட்டுள்ளார்.

சென்னை 41-வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தமிழன் பிரசன்னா எழுதிய இவன் கருப்பு சிவப்புக்காரன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அவர் புனித நூல்களை குப்பை என பேசியதால் விரட்டப்பட்டார் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் பாஜகவின் எச்.ராஜா. நடப்பது 41-வது புத்தக கண்காட்சி, ஆனால் எச்.ராஜா 10-வது புத்தக கண்காட்சி என கூறியிருந்தார்.

இதனையடுத்து எச்.ராஜாவுக்கு தனது டுவிட்டர் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார் திமுகவின் தமிழன் பிரசன்னா. அதில், எச்.ராஜாவுக்கு சவால் என கூறி, நான் புனித நூல்களை குப்பை என்று பேசியதையும், நீங்கள் குறிப்பிட்டு உள்ளபடி ஏதேனும் நிகழ்வு நடந்ததாக நிருபித்தால் நான் தீக்குளிக்க தயார், இல்லை என்றால் எச்.ராஜா தீக்குளிப்பாரா? என கேள்வி எழுப்பிய அவர் அடைப்புக்குள் நடப்பது 41-வது புத்தகக்கண்காட்சி என குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv