Tuesday , October 14 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா முடிவு

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா முடிவு

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147-பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் அவரது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார்.

இந்நிலையில், ரஜினியின் மக்கள் மன்ற கட்சியின் திண்டுக்கல் செயலாளர் தம்புராஜை கட்சியின் கட்டுபாட்டிற்கு முரண்பாடாக செயல்பட்டதால் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.

இதனால் திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள். ஒன்றிய பொறுப்பாளர்கள் என 147-பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்தள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv