Wednesday , February 5 2025
Home / முக்கிய செய்திகள் / தமிழகத்தை நோக்கி வரும் டெமிரி புயல்? – ரமணன் எச்சரிக்கை

தமிழகத்தை நோக்கி வரும் டெமிரி புயல்? – ரமணன் எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “சென்னையில் ஏறக்குறைய 12 மணி நேரங்களாக மழை பெய்து வருகிறது. தற்போது ‘டெமிரி’ என்ற புயல் வியட்நாம் பகுதியில் உள்ளது.

அந்தப் புயல் வங்கக் கடலை நோக்கி நகர்ந்தால் தமிழகத்தில் மேலும் அதிக மழை பொழிவு இருக்கும். குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பொழிவு இருக்கும். அதேபோல், தென் கடலோர மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv