Thursday , November 21 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / நாசாவின் புதிய விண்கலத்தை விண்ணில் செலுத்துவதில் தாமதம்

நாசாவின் புதிய விண்கலத்தை விண்ணில் செலுத்துவதில் தாமதம்

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. சூரியனுக்கு அப்பால் உள்ள பூமி போன்று வாழ தகுதியுடைய புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது.

அதற்காக ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற புதிய விண்கலத்தை உருவாக்கியுள்ளது. ‘வாஷிங் மெஷின்’ அளவுள்ள இந்த விண்கலத்தில் அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரூ.2,200 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் நேற்று மாலை 6.32 மணிக்கு புளோரிடாவின் கேப்கனவரல் தளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் ஒருசில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அந்த விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படலாம் என கூறப்படுகிறது. விண்வெளியில் நிலை நிறுத்தப்பட உள்ள இந்த விண்கலம் 2 ஆண்டுகள் செயல்படும். அது 2 லட்சம் ஒளிரும் நட்சத்திரங்களையும், புதிய கிரகங்களையும் கண்டுபிடிக்கும் என ‘நாசா’ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் சூரியனுக்கு அப்பால் மறைந்து கிடக்கும் 20 ஆயிரம் புதிய கிரகங்களை கண்டுபிடிக்க முடியும். அதில் பூமி அளவில் 50 புதிய உலகங்களும் அடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tamil News

 

 

 

 

Technology News

 

 

 

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …