ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வடக்கு பகுதியில் உள்ள டாஸ் குர்மாமுட்டில் காய்கறி சந்தை உள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் சந்தையில் திடீரென கார் குண்டு வெடிப்பு மூலம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குலுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாதமும் பொறுப்பேற்கவில்லை. காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.