Sunday , August 24 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையில் தொடரும் பதற்றம்! மூன்று முஸ்லிம்கள் பலி? பலர் படுகாயம்…

இலங்கையில் தொடரும் பதற்றம்! மூன்று முஸ்லிம்கள் பலி? பலர் படுகாயம்…

கடந்த நாற்பத்தெட்டு மணிநேரங்களில் இடம்பெற்ற கலவரத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது.

பலர் படுகாயமடைந்திருப்பதுடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரத்தில் ஏராளமான மக்களின் வீடுகளும் வியாபார நிலையங்களும் வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக ஸ்தலத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை இராணுவத்தினரின் தாக்குதலில் சில குண்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

எவ்வாறாயினும் குறித்த பகுதிகளில் ஊராடங்கு தொடர்ந்தும் அமுலில் உள்ளதுடன் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக உச்சக்கட்ட பலத்தைப் பிரயோகிக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv