நாட்டின் சட்டத்திற்கு அமைய, கொள்கலன்கள் கணக்கில் வாள்கள், இறக்குமதி செய்யப்பட்டு, அவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த வாள்களைக் கொண்டுவந்த அரசியல்வாதி ஒருவர் தனக்கு பிரச்சினை ஏற்படும் என அறிந்துகொண்டு, அவற்றை பள்ளிவாசலில் வைத்துள்ளார்.
எனவே, அந்த 47 வாள்களைத் தவிர வேறு எங்கும் வாள்கள் கைப்பற்றப்படவில்லை என அஸாத் ஸாலி குறிப்பிட்டுள்ளார்.