நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் கொடுத்துள்ள புகாரில், நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் சரியான ஆராய்ச்சி முடிவு வரும் வரை நிலவேம்பு கசாயத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டாம் என தனது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கருத்தால் டெங்கு காய்ச்சலுக்காக மக்களிடையே தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்காக நடிகர் கமல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெரியாத விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள கமல், நிலவேம்பு குடிநீர் பற்றிய சந்தேகம் தீர, ஏதாவது ஒரு சித்த மருத்துவரை அணுகியிருக்கலாம் என்று தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர்கள் சங்கம் கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.