Wednesday , February 5 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நாட்­டில் கடும் நிதி நெருக்­கடி சபையை உடன் கூட்­டுங்­கள்

நாட்­டில் கடும் நிதி நெருக்­கடி சபையை உடன் கூட்­டுங்­கள்

நாட்­டில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான நிதி நெருக்­க­டிக்­குத் தீர்­வு­காண நாடா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யா­கக் கூட்­டு­மாறு சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­ய­வி­டம் மகிந்த அணி­யான கூட்டு எதி­ரணி கோரிக்கை விடுத்­துள்­ளது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பந்­துல குண­வர்­த­னவே சபா­நா­ய­க­ரி­டம் இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள்­ளார்.

கடந்த வாரம் முதல் நாட்­டில் கடு­மை­யான நிதி­நெ­ருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. நிதி மூல­தன சந்­தை­யும் வீழ்ச்­சியை நோக்கி நகர்ந்து செல்­கி­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கி­ய­தால் பெற்­றுக்­கொண்ட 292 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­கள் இன்­ன­மும் மத்­திய வங்­கி­யின் வெளி­நாட்­டுக் கையி­ருப்­புக்­குச் சேர­வில்லை.

இதே­வேளை, கடன் பெறும் எல்­லையை அதி­க­ரிக்க நிதி அமைச்­சர் நாடா­ளு­மன்­றத்­தின் ஊடாக அனு­ம­தி­யைப் பெற்­றி­ருந்­தார். ஆனால், அரச வங்­கி­க­ளில் கடன் பெறும் எல்­லையை 5 ஆயி­ரம் கோடி­யா­கக் குறைத்­த­து­டன், பிணை­முறி விநி­யோ­கத்தை ஆயி­ரம் கோடி­யா­க­வும் குறைத் துள்­ளார்.

இந்­தச் செயற்­பா­டு­க­ளில் பரஸ்­பர விரோ­தத்­தன்மை காணப்­ப­டு­கின்­றது. நாட்­டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான நிதி நெருக்­கடி தொடர்­பில் கலந்­து­ரை­யாடி தீர்­வு­காண நாடா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யாக கூட்­டு­மாறு சபா­நா­ய­க­ரி­டம் பந்­துல குண­வர்­தன எடுத்­து­ரைத்­துள்­ளார்.

2018ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டம் கடந்த 9ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. அத­னைத் தொடர்ந்து மீண்­டும் 11ஆம் திகதி அர­ச­மைப்பு நிர்­ண­ய­சபை கூட்­டப்­பட்­டி­ருந்­தது.

அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் உரை­யாற்ற எந்­த­வொரு உறுப்­பி­ன­ரும் சமூ­க­ம­ளித்­தி­ருக்­கா­த­தன் கார­ண­மாக எதிர்­வ­ரும் ஜன­வரி 23ஆம் திக­தி­வரை நாடா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே பந்­துல குண­வர்­தன மேற்­கண்­ட­வாறு சபா­நா­ய­க­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv