Thursday , June 13 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தவர்

சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தவர்

சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தவர்

அயர்லாந்து நாட்டில் வசித்து வருபவர் ஜான் எட்வரடு இவர் தன் மனைவி திரிஷுடன் வசித்து வருகிறார். இவர் உலகுக்கு ஒரு நல்ல ஆலோசனை கூற ஒரு வித்தியாச முறையை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் இருப்பவர்கள் அதை கைவிட வேண்டும் என கூறி உயிருடன் தன்னை தானே சவப்பெட்டியில் வைத்து பூமிக்கடியில் 3 நாட்களுக்கு புதைக்க வைத்துள்ளார்.

புதைக்குழி உள்ளே அவருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் இண்டர்நெட் வசதியும் அங்கு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜான் பேஸ்புக் நேரலையில், தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

இது குறித்து ஜான் கூறுகையில், நானும் 25 ஆண்டுகளுக்கு முன்னர் மன அழுத்தம் அடைந்து தற்கொலை எண்ணம் கொண்டேன். பின்னர் அதிலிருந்து மீண்டேன்.

தற்போது இது குறித்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவே இந்த காரியத்தில் ஈடுப்பட்டேன் என அவர் கூறியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …