வடகொரியாவுடன் இறக்குமதி செய்த பொருட்களை செப்டம்பர் 5-ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள இருப்பதாக சீனா கூறியுள்ளது.
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த புதிய பொருளாதாரத் தடைக்கும் ஐ. நா பாதுகாப்பு சபையிலுள்ள 15 நாடுகள் ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து வடகொரியாவுடனான இறக்குமதியை நிறுத்திக் கொள்ள இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீனா தரப்பில், “ஐக்கிய நாடுகளின் தடையை மீறி அணுஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொண்ட வடகொரியாவுடனான இறக்குமதியை சீனா நிறுத்தி கொள்கிறது.
வடகொரியாவிலிருந்து இறக்குமதி செய்த நிலக்கரி, இரும்பு மற்றும் இதர பொருட்களை செப்டம்பர் 5-ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ள இன்று (திங்கட்கிழமை) முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இதனை சீன அரசின் சுங்கத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.