Saturday , August 23 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளும் திருமணம் செய்து கொள்ளும் புதிய சட்டம்.

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளும் திருமணம் செய்து கொள்ளும் புதிய சட்டம்.

வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளும் திருமணம் செய்து கொள்ளும் புதிய சட்டம்.

வங்காள் தேசத்தில் திருமண வயது வரம்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. இவற்றையும் மீறி அங்கு சிறுவர் சிறுமிகளுக்கான திருமணங்கள் நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 எனவும், பெண்களுக்கு 18 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதிலும் சில விதிவிலக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் 14 வயது பூர்த்தி அடைந்த சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்களுக்கு திருமண வயது 18 என்று குறிப்பிட்டு விட்டு மற்றொரு பக்கம் சில காரணங்களுக்காக 14 வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் 14 வயது சிறுமிகளுக்கும் தாராளமாக திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.

இதற்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் ஒரு சில அமைப்புகள் இச்சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …