Friday , November 22 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / செக் வைத்துள்ள மகிந்த அணி! வசமாக சிக்கிய ரணில்

செக் வைத்துள்ள மகிந்த அணி! வசமாக சிக்கிய ரணில்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து, நாளை நம்பிக்கைப் பிரேரணை ஒன்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டுள்ள நிலையிலேயே, உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

‘நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானத்தை நிறைவேற்றி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், புதிய பிரதமரை நியமிக்கும் உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் பிறப்பிப்பதற்கு பொருத்தமான தேவை கிடையாது.

ஏனென்றால் ஏற்கனவே ஒரு பிரதமர் இருக்கிறார். அவர் செயற்படுவதை மாத்திரமே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு இடைநிறுத்தி வைத்திருக்கிறது.

இடைக்கால உத்தரவு, மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கி விட்டதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. அவர் பிரதமராகப் பணியாற்றுவதற்கே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றினாலும் கூட, அவரை பிரதமராக நியமிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv