மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பண்புகளை வளர்பதை நோக்காகக் கொண்டு ஸ்ரீலங்காவில் புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சுடன் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான கல்வி அழகினை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த பாட அழகு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “மாணவர்களிடையே ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற பண்புகளை வளர்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனூடாக இன்றைய சமதாயத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சவாலான சூழ்நிலைகளை ஒற்றுமையுடன் இருந்து சமாளிக்கின்ற ஒரு எதிர்கால சந்தியினை உருவாக்குவதே பிரதான நோக்கமாக உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சகோதரத்துவ பாடசாலை அமைப்பு பணிகள், சமய ரீதியிலான நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள், உள்ளிட்டவை வழங்கப்ட்டதன் பின்னர் பாடசாலைகளின் உள்ளேயும் இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
அதேபோல தற்போதும் கல்வி சார்ந்த பல பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை களைய இன்னும் பல தலைமுறைகளை நாம் கடக்க வேண்டியிருக்கும் அதற்கு அடித்தளம் இடும் வகையிலான கல்வி மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தே தற்போது நாம் அவதானம் செலுத்த வேண்டும்.
மேலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள் பாடசாலைகளுக்கும் மற்றைய பாடசாலைகளுக்குமான வள பகிர்வு செயற்பாடுகள் சமாந்தர தன்மையுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இவை கடந்த காலங்களில் இடம்பெறவில்லை. அரசியலை விடுத்து பார்கின்ற போதும் கடந்த காலங்களுடன் ஒப்பீட்டளவில் பார்கின்ற போது தற்போது கல்வி வளர்சி குன்றியுள்ளது அதனை மறுசீரமைக்க நாம் சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்“ எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வடக்கு கிழக்கு பாடசாலைகளை முன்னேற்றினால் மாத்திரமே ஆசிய வலயத்தில் கல்விச் செயற்பாடுகளில் அதிக அக்கறை செலுத்தும் நாடு என்ற வகையில் கல்வி வளர்ச்சியில் முன்னிற்க முடியும்.
தற்போது நாடு முழுவதும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் தரமான கல்வியை தரமாக பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பாடசாலைகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பாடசாலைகளுக்கு இடையிான விளையாட்டு போட்டிகளின் போது மாணவர்கள் ஆவேசமாக நடந்துகொண்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பிான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.