Thursday , October 9 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / காவிரி பிரச்சினை நீடிக்க அரசியல் கட்சிகள் விருப்பம் – நடிகர் பிரகாஷ்ராஜ்

காவிரி பிரச்சினை நீடிக்க அரசியல் கட்சிகள் விருப்பம் – நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். பா.ஜனதா நாட்டை ஆளக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலம் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையை தீர்க்காமல் அதை அரசியல் கட்சிகள் உயிரோடு வைத்திருக்கவே விரும்புகின்றன. நைல் நதி நீர் 4 நாடுகள் இடையே சுமுகமாக பங்கிட்டு வழங்கப்பட்டு உள்ளது. அண்டை நாடுகளுடன் இருக்கும் நதிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்போது, இந்தியாவில் 2 மாநிலங்களுக்கு இடையே உள்ள இந்த காவிரி பிரச்சினையை தீர்க்க முடியாதது ஏன்?.

அரசியல் தைரியம் இருந்தால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். ஒரு முறையான பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஆனால் இதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகளோ அல்லது அதன் தலைவர்களோ எடுக்கவில்லை.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv