தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்காமம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிபுரம் பகுதியை சேர்ந்த கணேசபிள்ளை கார்த்திகா எனும் 16 வயது சிறுமியின் சடலமே நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பில் மூதூர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு …
Read More »இராணுவ அதிகாரிகளின் பதவியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!
இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் உத்தரவின் பேரில் இராணுவ செயலகம் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அவர் வகித்து வந்த, மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைத் தளபதி பதவியியையும் அவர் தொடரவுள்ளதாக …
Read More »கிளிநொச்சியில் நடக்கும் அட்டூழியத்தின் உச்சம்
கிளிநொச்சி கல்லாறு பிரதேசத்தில் அளவுக்கடங்காமல் நடக்கும் சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இங்குள்ள வனம் அழிக்கப்பட்டு பாரிய அளவில் மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றது. மண்ணகழ்வு இடம்பெற்று வரும் பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான பகுதி. அதேவேளை, பறவைகள் சரணாலயமும் காணப்படுகின்றது. இந்த பகுதியில் சுமார் 5 அடிக்கு அதிகமான ஆழத்தில் தோண்டப்பட்டு மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இந்த சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்பில் …
Read More »இராட்சத சுறாவை பிடித்தவர் கதறுகிறார்
20 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் கையகப்படுத்தப்பட்டது: தானாக வந்து சிக்கியதற்கு இந்த தண்டனையா?… கதறுகிறார் புள்ளிசுறா பிடித்தவர் கிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் அரியவகை புள்ளி சுறாவை வேட்டையாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளி நான்கு ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 13 இலட்சம் பெறுமதியான அவரது படகு, இயந்திரம், மற்றும் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் என்பன கடற்படையினரின் கட்டுபாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். புள்ளிசுறாவை வேட்டையாட …
Read More »இன்றைய ராசிபலன் 30.06.2019
மேஷம்: இன்று பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடு வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம்: இன்று மனதில் நிம்மதியும் …
Read More »கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பதட்டம்!
இலங்கையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் மற்றும் மருதானை ரயில் நிலையத்தில் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இலங்கை நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவர்கள் இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட …
Read More »அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே, அவர் இதனை கூறியுள்ளார். நாடு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சில தூதரகங்கள், பாடசாலைகள் விடுத்த கோரிக்கைக்கமையவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »பொலித்தீன் அற்ற நகரமாக மாறும் யாழ் சாவகச்சேரி!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், நகர சபையினரும், அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து வீதியோரங்களில் காணப்படும் பொலித்தீன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
Read More »முஸ்லிம் அமைச்சர்களுக்கு மஹிந்த அழைப்பு
முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது கட்சியில் இணைந்துக்கொள்ள முடியுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கும் செயற்பாட்டை தங்களது கட்சி முன்னெடுத்துள்ளது. ஆகையால் தற்போதுள்ள முஸ்லிம் தலைமைகளும் இதில் இணைந்துக்கொள்ள முடியுமென மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவதற்காக தமது கட்சியை …
Read More »கல்முனை பகுதி மாபெரும் கலவர பூமியாக மாறும் அபாய நிலை!
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாமெனக் கோரி இன்றையதினம் முஸ்லிம் மக்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தமிழர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் அமைதியாக இருந்த முஸ்லிம் மக்களை ஹரீஸ் எம்.பி தூண்டிவிட்டு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட வைத்துள்ளார். நேற்றைய தினம் தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு …
Read More »