ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி! ஜனாதிபதிக்கு உண்டான அதிகாரத்தின் கீழ் நாடு முழுவதிலும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ம் சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தலில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் …
Read More »இலங்கையில் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம்!
இலங்கையில் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம்! எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகளை தவர்ந்த பகுதிகளில் அதிகாலை 05 மணித் தொடக்கம் இரவு எட்டு மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு , …
Read More »பயங்கரவாததிற்கு இடமளிக்க முடியாது – கமால்
பயங்கரவாததிற்கு இடமளிக்க முடியாது – கமால் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், குற்றவாளிகளுக்கு அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் சிறப்புரிமை, இன, மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும். சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும் அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு …
Read More »இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இலங்கையில் இன்று (22) 11 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. கொழும்பு – பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 62 பேருக்கு இதுவரை புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 210 …
Read More »ஈஸ்டர் பயங்கரவாத நினைவேந்தல் வழிபாடு
ஈஸ்டர் பயங்கரவாத நினைவேந்தல் வழிபாடு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து இன்று (21) காலை ஓராண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஆயர் இல்லத்தில் இன்று காலை 8.45 மணிக்கு இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் …
Read More »இலங்கை மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு
இலங்கை மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு பாகிஸ்தானில் சிக்கியுள்ள 113 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக, விசேட விமானமொன்று இலங்கையிலிருந்து பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளது. இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, யூ.எல். 1205 என்ற விமானம் இன்று காலை பாகிஸ்தானின் கராச்சி நகர் நோக்கி பயணித்துள்ளது. குறித்த விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட 17 அலுவலகர்கள் காணப்படுவதாகவும் இன்று இரவு 7.45 மணியளவில் குறித்த விமானம் பாகிஸ்தானிலிருந்து மாணவர்களுடன் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
Read More »இலங்கையில் கொரோனாவில் இருந்து 100 பேர் குணமடைவு
இலங்கையில் கொரோனாவில் இருந்து 100 பேர் குணமடைவு இலங்கையில் கொரோனாத் தொற்றிலிருந்து மேலும் மூவர் குணமடைந்து வீடு திரும்புவதால், குணமடைந்தோர் எண்ணிக்கை நூறை அடைந்தது. மேலும் 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »ஊரடங்கு வேளையில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு
ஊரடங்கு வேளையில் கசிப்பு உற்பத்தி அதிகரிப்பு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான (கசிப்பு) உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் (மார்ச்-20) தொடக்கம் கடந்த 15ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இது தொடர்பில் 100 இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்போது, 400 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். …
Read More »31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்!
31 ஆயிரத்தை தாண்டும் ஊரடங்கை மீறியோர் கைதுகள்! ஊரடங்குச் சட்டத்தை மீறிய 31,690 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இன்று (18) வரையான 29 நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 8151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை இவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »வவுனியா மாவட்ட கொரோனா வைரஸ் நிலவரங்கள்
வவுனியா மாவட்ட கொரோனா வைரஸ் நிலவரங்கள் வவுனியா மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 17) 14 பேருக்கு கொரோனா தொற்றிற்கான ஆய்வுகூடப் பரிசோதனை அநுராதாபுரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டது என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »