Tuesday , December 3 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 60)

இலங்கை செய்திகள்

ஆறாத வடு! யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள்!

தெற்காசியாவின் ஆசியாவின் அறிவுக் கருவூலமாக விளங்கிய யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எரிந்த தீ அணைந்துவிட்டாலும் தமிழர்களின் மனதில் அந்த சம்பவம் ஏற்படுத்திய வடு இன்னும் ஆறாமல் எரிந்துகொண்டிருக்கிறது. 1981ம் ஆண்டு. சிங்கள பேரினவாதம் தமிழர்களின் மேல் அடக்குமுறைகளையும், அடாவடித்தனங்களையும், கட்டவிழ்த்துக்கொண்டிருந்த காலப்பகுதி. குறித்த ஆண்டின் மே மாதத்தின் 31ம் திகதி நள்ளிரவில், தமிழ் தலைமுறைகளின் மேல் ஊற்றப்பட்ட எரிதலாக, காதுகளில் வந்து விழுந்த …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் குறித்த போராட்டம் இன்றுமதியம் தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்றது . இதேவேளை வவுனியாவில் இருந்து வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சிலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Read More »

மைத்திரிக்கு வருகிறது பெரும் சிக்கல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தின் 11 நீதியரசர்கள் அடங்கிய முழுமையான நீதியரசர் குழு அமர வேண்டும் என சட்டமா அதிபர் நீதிமன்றில் கோரவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றச் செயலைத் தடுக்கத் தவறியதால் (Criminal negligence) 21/4 தாக்குதல் நடந்ததாக குற்றம் சுமத்தி, ஜனாதிபதி மீது பொறுப்புக்கூறும் (Vicarious Liability) மனித உரிமை வழக்கொன்று தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 21/4 …

Read More »

தமிழ் அரசு கட்சி முக்கிய கூட்டம் நாளை

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு வரும் யூன் மாதம் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய மாநாட்டை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களினால் மாநாடு பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மாநாட்டை நடத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளை காலை கட்சியின் யாழ் மாவட்ட கூட்டம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்திலும், நாளை பிற்பகல் மாட்டின் வீதியில் உள்ள …

Read More »

தீவிரவாதிகளிற்கு எதிராக யாழில் முஸ்லிம்கள் போராட்டம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் போராட்டம் இடம்பெற்றது. ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்ட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More »

தேர்தலின் போது ஐ. தே. கட்சி வேட்பாளரை இறக்குமதி செய்யாது

ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியானது இம்முறை வேட்பாளரை இறக்குமதி செய்யாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை கூறியுள்ளார். அதோடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாக வெளியாகி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், ஐ. தே. கட்சியின் வேட்பாளர் ஒருவரே இம்முறை …

Read More »

அமெ­ரிக்­காவின் ஆயு­தப்­ப­டை­களை இலங்­கைக்குள் இல்லை

ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஆயு­தப்­ப­டை­களை இலங்­கைக்குள் கள­மி­றக்­க­வில்லை எனவும் இலங்­கையின் பாது­காப்­பு ­ப­டை­களின் பாது­காப்பில் மட்­டுமே இலங்கை உள்­ளதாகவும் இரா­ணுவ ஊட­கப்­பேச்­சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் சென­வி­ரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் நெருக்­கடி நிலை­மை­களை அடுத்து இலங்­கைக்குள் அமெ­ரிக்க இரா­ணுவம் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள் வெளி­வ­ரு­கின்ற நிலையில் அதன் உண்­மைத்­தன்மை குறித்து வின­விய போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்­கைக்குள் எந்­த­வித சர்­வ­தேச இரா­ணுவ படை­களும் கள­மி­றக்­கப்­ப­ட­வில்லை எனவும், குறிப்­பாக ஐக்­கிய அமெ­ரிக்­காவின் இரா­ணு­வப்­ப­டைகள் …

Read More »

சிக்கிய தீவிரவாதியின் தற்போதைய நிலை என்ன?

குருணாகல் – அலகொலதெனிய பகுதியில் தென்னத்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்கொலை தககுதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தர் என கூறப்பட்ட பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரின் கைது தொடர்பில் பல்வேறு உண்மை நிலை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. கண்டி – அலவத்துகொட, …

Read More »

டெங்கு தொடர்பில் எச்சரிக்கை! கொழும்பில் அதிகமானோர் பாதிப்பு

கடந்த ஐந்து மாத காலப் பகுதியில் நாடு முழுவதிலும் 17975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்காலப் பகுதிக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 26 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த நோயாளர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்குள் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 2075 …

Read More »

அவசரகால சட்டம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் ஒருமாத காலப்பகுதிக்கு பின்னர் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளார். பாதுகாப்பு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். …

Read More »