Saturday , November 16 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 19)

இலங்கை செய்திகள்

ஏப்ரல் 20வரை பாடசாலைகளை மூட கல்வியமைச்சு தீர்மானம்

ஏப்ரல் 20வரை பாடசாலைகளை மூட கல்வியமைச்சு தீர்மானம்

ஏப்ரல் 20வரை பாடசாலைகளை மூட கல்வியமைச்சு தீர்மானம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளை (13) முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கல்விமையச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை கொரோனா சந்தேகத்தில் இத்தாலி குடும்பம் அநுராதபுரத்தில் அனுமதிப்பு …

Read More »

கொரோனா சந்தேகத்தில் இத்தாலி குடும்பம் அநுராதபுரத்தில் அனுமதிப்பு

கொரோனா சந்தேகத்தில் இத்தாலி குடும்பம்

கொரோனா சந்தேகத்தில் இத்தாலி குடும்பம் அநுராதபுரத்தில் அனுமதிப்பு கொரோனா வைரஸ் சந்தேகத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இத்தாலி குடும்பம் கடந்த 28ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் 72 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் அவர் இன்று பகல் அநுராதபுரம் மருத்துவமனையில் பொலிஸாரின் உதவியுடன் அனுமதிக்கபட்டதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை அவர்கள் பயன்படுத்திய காரை மருத்துவமனை அதிகாரிகள் …

Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை

கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை

கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கைப் பிரஜை கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட முதல் இலங்கைப் பிரஜை மற்றும் அவர் வழிகாட்டியாக சேவை வழங்கிய இத்தாலி சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த இடங்கள் சம்பந்தமான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்தவகையில் அவர்கள் கண்டி – அமாயா ஹில்ஸ் மற்றும் ரோயல் கண்டியன் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த 03ஆம் திகதி முதல் 08ஆம் திகதிவரை அவர்கள் கண்டியில் …

Read More »

ஐ.தே.க எம்மை ஏமாற்றி விட்டது – சி.வி.கே. சிவஞானம்

ஐ.தே.க எம்மை ஏமாற்றி விட்டது - சி.வி.கே. சிவஞானம்

ஐ.தே.க எம்மை ஏமாற்றி விட்டது – சி.வி.கே. சிவஞானம் ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஏமாற்றி விட்டார். அதுவரை நாம் ஐ.தே.கவை நம்பியது உண்மைதான் என்று தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (10) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், …

Read More »

சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர செய்துள்ளது – வேலுகுமார்

சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர செய்துள்ளது - வேலுகுமார்

சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர செய்துள்ளது – வேலுகுமார் “கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதை தவிர்த்து, சமூக பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிவர நிறைவேற்றியுள்ளமை வரவேற்கத்தக்கது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் இன்று (11.03.2020) அவர் ஊடங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மனோ கணேசன் வெறுமனே கொழும்பு மாவட்ட …

Read More »

இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி!

இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி!

இரண்டாக போகும் ஐ.தே.க கட்சி! ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மோதல் வலுத்துள்ள நிலையில் ரணில் மற்றும் சஜித் அணிகளை ஒன்றிணைத்து பொதுத்தேர்தலை ஓரணியாக எதிர்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட கடைசி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனால் இரு அணிகளுமே தனிவழிப் பயணத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் தமது கட்சி யானை சின்னத்தின்கீழ் 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் …

Read More »

தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது- மன்னார் ஆயர்

தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது- மன்னார் ஆயர்

தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது- மன்னார் ஆயர் இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயரால் கத்தோலிக்க மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்த நாட்டு மக்களாகிய நாம் மீண்டும் ஒரு பொதுத் …

Read More »

பிரித்தானிய பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

பிரித்தானிய பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

பிரித்தானிய பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது பொத்துவில் விடுதி ஒன்றில் வைத்து வௌிநாட்டு பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் மற்றுமொரு பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 18 வயதான பிரித்தானிய யுவதி, பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த யுவதியின் 19 வயது நண்பியையே, சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முற்பட்டுள்ளார். அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலுள்ள மற்றுமொரு விடுதிக்கு சென்று வந்த சந்தர்ப்பத்திலேயே, …

Read More »

ரணிலை கட்சியில் இணைய சஜித் அழைப்பு!

ரணிலை கட்சியில் இணைய சஜித் அழைப்பு!

ரணிலை கட்சியில் இணைய சஜித் அழைப்பு! ” ஐக்கிய மக்கள் சக்தியின் கதவும் திறந்தே உள்ளது.எனவே, ரணில் விக்கிரமசிங்க உட்பட ஏனைய உறுப்பினர்கள் இக்கூட்டணியில் இணையலாம்.” – என்று சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய சஜித் பிரேமதாச, “ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரின் ஆசியுடன் கட்சி அனுமதித்த வேலைத்திட்டத்தையே நாம் முன்னெடுத்துசெல்கின்றோம். புதிய கூட்டணி அமைப்பதற்கும், …

Read More »

கருணாவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு!

கருணாவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு!

கருணாவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு! முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூத்தி முரளிதரன் தலமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையிலான கிழக்குத் தமிழர் கூட்டமைப்புக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (08) மட்டக்களப்பில் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒரே பொதுச்சின்னத்தின் கீழ் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ளல் தொடர்பில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் செயற்பாடுகளின் ஒரு கட்டமாக இச்சந்திப்பு கல்லடியிலுள்ள தனியார் ஹோட்டலில் …

Read More »