Monday , October 20 2025
Home / செய்திகள் (page 490)

செய்திகள்

News

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் தொடர்கின்றன அறவழிப் போராட்டங்கள்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களை

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் தொடர்கின்றன அறவழிப் போராட்டங்கள்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 5 மாவட்டங்களில் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் தீர்வு கிடைக்காமல் தொடர்கின்றன. வடக்கின் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலிறுத்தியே அவர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். “எமக்கு உறுதியான தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. எம்மை வீதியில் விட்டு வேடிக்கை …

Read More »

ஜெனிவாவில் இலங்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ரொட்டுக்கு அளித்தது அமெரிக்கா!

ஜெனிவாவில் இலங்கை

ஜெனிவாவில் இலங்கை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ரொட்டுக்கு அளித்தது அமெரிக்கா! இலங்கை விவகாரம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் அதிகாரம், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான முதன்மைப் பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான முழு அதிகாரத்தையும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான முதன்மைப் பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட்டுக்கு …

Read More »

போரின்போது இலங்கைப் படைக்கு சீனா வழங்கிய பங்களிப்புக்கு மைத்திரி பாராட்டு!

போரின்போது இலங்கைப் படைக்கு சீனா

போரின்போது இலங்கைப் படைக்கு சீனா வழங்கிய பங்களிப்புக்கு மைத்திரி பாராட்டு! “இலங்கைப் படையினருக்குத் தேவையான பயிற்சிகளை சீன அரசு தொடர்ந்தும் வழங்கவேண்டும்” என்று அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்துவரும் உறவுகளை …

Read More »

இலங்கைக்கு அவகாசம்: எதிர்க்கவேண்டும் இந்தியா! – அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்து

இலங்கைக்கு அவகாசம்: எதிர்க்கவேண்டும் இந்தியா

இலங்கைக்கு அவகாசம்: எதிர்க்கவேண்டும் இந்தியா! – அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்து போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கைக்கு அவகாசம் வழங்குவதற்கான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. மைத்திரேயன் வலியுறுத்தினார். இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்கு இலங்கை அரசு 2 வருட அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கும் வகையில், ஜெனிவாவில் நாளைமறுதினம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் …

Read More »

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் கட்டாயம்! – பிரிட்டன் உறுதி

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள்

விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் கட்டாயம்! – பிரிட்டன் உறுதி நம்பகமான விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுநர்கள் அவசியம் இடம்பெறவேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. கலப்பு நீதிமன்றப் பொறிமுறைப் பரிந்துரையை நிராகரித்து, இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர்கள் அண்மையில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள பிரிட்டன் தூதரகப் பேச்சாளர், “நம்பகமான நீதிப் பொறிமுறைகளின் மூலம், ஐ.நா. …

Read More »

இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு வேண்டும்! – ஐ.நாவை வலியுறுத்துகின்றார் ஸ் ரீபன் ரப்

இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு

இலங்கை அரசுக்கு கடும் கண்காணிப்பு வேண்டும்! – ஐ.நாவை வலியுறுத்துகின்றார் ஸ் ரீபன் ரப் “போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் செயன்முறையை செயற்படுத்த இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படும்போது, அதற்கான கால அட்டவணையையும் வலுவான கண்காணிப்பையும் ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ் ரீபன் ரப். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு …

Read More »

மதவாச்சியில் மரத்துடன் மோதியது வான்! – சம்பவ இடத்திலிலேயே சாரதி பலி

மதவாச்சியில் மரத்துடன் மோதியது வான்

மதவாச்சியில் மரத்துடன் மோதியது வான்! – சம்பவ இடத்திலிலேயே சாரதி பலி மதவாச்சி, பூனாவைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிலந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரிசி மூடைகளை ஏற்றிய பட்டா ரக வாகனம் இன்று மாலை 4.30 மணியளவில் மதவாச்சி, பூனாவைப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பட்டா …

Read More »

திருமலை அபிவிருத்தி கூட்டத்ததில் டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட தீர்மானம்

திருமலை அபிவிருத்தி கூட்டத்ததில் டெங்குவை

திருமலை அபிவிருத்தி கூட்டத்ததில் டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட தீர்மானம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசஅதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்களான நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே,திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்×ப் ஆகியோரின் பங்கு …

Read More »

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் திருப்பம்

லசந்த விக்ரமதுங்க கொலை

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் திருப்பம் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தலையில் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் தலையில் தாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தெஹிவளை …

Read More »

கர்ப்பிணி பெண் பலி

கர்ப்பிணி பெண் பலி

கர்ப்பிணி பெண் பலி கிண்ணியா தள வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிகக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாள ஒருவர் தெரிவித்தார். கர்ப்பிணியான குறித்த பெண்ணின் சிசுவை மீட்கும் நோக்கில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்துள்ளதாகவும், தாயார் இன்று உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் …

Read More »