தமிழ் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உரிமைகளை பெற்றுக் கொள்ளும் நாளிலேயே உண்மையான விடுதலைக்கான பயணம் ஆரம்பிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் இன்றையதினம் (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “”ஏழு கோடி உலகத் தமிழர்களையும் அவர்களின் உரிமைகளையும் அழித்த தடயமாக மே 18 முள்ளிவாய்க்கால் …
Read More »கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு: 4 பெண்கள் கைது
கிளிநொச்சி நகருக்கு அண்மையிலுள்ள கிராமப் பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் விபச்சார நிலையமொன்றை பொலிஸார் இன்று (புதன்கிழமை) சுற்றிவளைத்ததில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்கவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரினால் குறித்த …
Read More »முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள்! – வடக்கு மாகாண சபை மேற்கொண்டுள்ளது
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் நாளைமறுதினம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கான பஸ் ஒழுங்குகள் மாவட்ட ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று நினைவேந்தல் குழு சார்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- முல்லைத்தீவு மாவட்டம் பஸ் ஒழுங்குகள் – துணுக்காய் பிரதேச செயலகம் முன்பாக காலை 7.30, மாந்தை கிழக்கு …
Read More »கிளிநொச்சியில் வாள்வெட்டு! – கணவன் பலி; மனைவி படுகாயம்
கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்த தம்பதியர் மீது இன்று பிற்பகல் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் கணவன் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். குறித்த ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த தம்பதியர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ஹோட்டலின் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், குறித்த தம்பதியர் …
Read More »வடகொரியாவை மிரட்டுவதை விடுத்து, பேச்சுவார்த்தை நடத்துங்கள்: புதின் அறிவுரை
உலக நாடுகள் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மிரட்டக் கூடாது என்று ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா நேற்று மீண்டும் ஒரு அணு குண்டு சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக நாடுகள் வடகொரியா …
Read More »உணவு சாப்பிட துரித உணவகம் முன்பு அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானி
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவக வளாகத்தில் திடீரென ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ‘பசிவந்தால் பத்தும்பறந்து போகும்’ என்ற பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பசியால் வாடிய விமானி ஒருவர் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரை துரித உணவகம் முன்பு இறக்கி உணவு பொருட்களை வாங்கி சென்றார். இச்சம்பவம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள …
Read More »ஏவுகணை விவகாரம்: வடகொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் விதமாக சமீபத்தில் வடகொரியா நடத்தியுள்ள ஏவுகணை சோதனைக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால் கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. புதிய …
Read More »கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை ; பைத்தியத்துக்கு இந்திய வைத்தியர் ஒருவரிடம்தான் வைத்தியம் பார்க்க வேண்டும் : மனோ கணேசன்
இந்திய பிரதமர் மோடி, மலையகம் சென்று, தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை அமைத்து தர உறுதியளித்துள்ளார். அதேபோல், இலங்கையில், இந்தியா ஏற்கனவே வழங்கிவரும் இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகன வசதியை இன்னும் ஏழு மாகாணங்களுக்கு விஸ்தரிப்பது தொடர்பாகவும் அறிவித்துள்ளார். இவை பற்றிய பின்னணிகளை அறியாமல், புரிந்துக்கொள்ள முயற்சி செய்யாமல், இத்தகைய அறிவிப்புகளை செய்ய நரேந்திர மோடி யார்? இலங்கை இந்தியாவின் 30வது மாநிலமா? என்ற கேள்விகளை எழுப்பி, அதன்மூலம் …
Read More »சர்வதேசத்தின் தலையீட்டின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம்: சி.வி.
சர்வதேச உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒருபோதும் உண்மையை வெளிக் கொண்டுவர உதவி செய்யாது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அத்தினத்தில் தமிழ் மக்கள் அனைவரும் 3 நிமிட …
Read More »வடக்கின் அபிவிருத்தி பணிகள் திருப்தியளித்துள்ளன என்கிறது அமெரிக்க காங்கிரஸ்
யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட. மாகாணத்தில், புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், வடக்கு மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முன்னேற்றகரமான முறையில் செயற்படும் …
Read More »