வடகொரியா எல்லை பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். வடகொரியா அத்துமீறல்: போருக்கு தயாராகுங்கள் என தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் கட்டளை சியோல்: வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை போன்றவற்றை …
Read More »அமெரிக்க மக்களிடம் ரஷிய எதிர்ப்பு உணர்வை திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள்: புதின் குற்றச்சாட்டு
சமீப காலமாக அமெரிக்க மக்களிடம் ரஷியாவுக்கு எதிரான மனபோக்கை உருவாக்க சிலர் திட்டமிட்டு முயற்சித்து வருகிறார்கள் என அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். ரஷிய வெளியுறவு துறை மந்திரி செர்கெய் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தார். அவர் அதிபர் டொனால்டு டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது டொனால்டு டிரம்ப் பல்வேறு ரகசியங்களை ரஷிய மந்திரியிடம் கூறியதாகவும், குறிப்பாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான ரகசியங்களை அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் அமெரிக்க …
Read More »முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கிளிநொச்சியில் தனி சிங்கள கொடி!
கிளிநொச்சி நகரில் சிறுபான்மை இனங்களை சித்தரிக்கும் நிறங்கள் அகற்றப்பட்ட தனி சிங்கள கொடி சில விஷமிகளால் பறக்கவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு பேருந்தில் வந்த சிலரால் இந்த கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலானது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறிவரும் தமிழ் சமூகத்தை கொந்தளிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அம்மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த …
Read More »இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இவ்வருடம்!
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இவ்வருடத்தினுள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக சீனப் பிரதமர் லீ கெகியான் தெரிவித்துள்ளார். ‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ திட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றிருந்த பிரதமர் ரணிலை பீஜிங் நகரில் சந்தித்து கலந்துரையாடியபோதே சீன பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து, நிதி, வணிகம் போன்ற துறைகளை அடிப்படையாகக்கொண்டு, இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை முன்னேற்றுவதற்கு தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவியை இலங்கைக்கு …
Read More »தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது: சரத் பொன்சேகா
இறந்தவர்களை நினைவு கூரவும் அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும் எவருக்கும் முடியும் என முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு குறித்து கேட்டபோதே சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கம் பிரபாகரனின் இரத்த உறவினர் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் யுத்த காலத்தில் அவ்வாறு இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்த சரத்பொன்சேகா யுத்தத்தின் …
Read More »யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் பொதுச் சுடரினை ஏற்றி வைத்து, அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் மலர் தூவியும் ஈகைச் சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர். …
Read More »இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது : ஜனாதிபதி திட்டவட்டம்
இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள், சட்டமா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குறித்த சந்திப்பில் காணாமல் போனோர் தொடர்பாகவும், இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும், …
Read More »ஈழத்தில் செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துக்க நாள் இன்று! – தரணியெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள்; பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்காலில்
ஈழத் தமிழர் வாழ்நாளில் இன்று கறுப்பு நாள்; செங்குருதி தோய்ந்த மிகப்பெரிய துயர்படிந்த நாள்; மாபெரும் மனிதப் படுகொலை நடந்த நாள்; முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறித்தெடுக்கப்பட்ட தமது உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலிசெய்யும் நிகழ்வுகளில் தமிழர்கள் ஈடுபடும் நாள். தமிழ் இனத்தின் மீது அரசாலும் அதன் படைகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய மிக மோசமான படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நாள் இன்று. இறுதிக்கட்டப் …
Read More »இலங்கை பல்லின மக்களும் வாழும் நாடு; சிங்களவரும் இந்தியாவிலிருந்தே வந்தனர்! – மகாவம்சக் கதை கூறி ஞானசார தேரருக்கு மனோ பதிலடி
“சிங்களவர்களும் இந்தியாவிலிருந்தே வந்தனர் என்று நீங்கள் கூறும் அதே மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இலங்கையானது பல்லின மக்களும் வாழும் நாடாகும். இங்கு தமிழ்மொழியும் அரச கரும மொழியாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு எடுத்துரைத்து பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பதிலடி கொடுத்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன். பொதுபலசேனா அமைப்பு தலைமையிலான கடும்போக்குடைய சிங்கள, பௌத்த தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய …
Read More »இலங்கை சிங்கள பௌத்த நாடு! அனைவரும் இதை ஏற்கவேண்டும்!! – இல்லையேல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்கிறார் ஞானசார தேரர்
“இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு. இதை அனைவரும் ஏற்றாகவேண்டும். எனவே, வந்தேறுக்குடிகளான தமிழ், முஸ்லிம் மக்கள் எமது (பௌத்தர்களின்) கலாசாரம், மொழியைக் கற்கவேண்டும். அப்போதே நல்லிணக்கம் சாத்தியமாகும்.” – இவ்வாறு தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனிடம் கடுந்தொனியில் எடுத்துரைத்தார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர். தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனை சந்தித்துப் …
Read More »