தென் சீனக் கடல் பகுதிக்குள் அமெரிக்கா தனது கடற்படையின் போர்க் கப்பலை அனுப்பியுள்ள நிலையில், இது ஆத்திரமூட்டும் நடவடிக்கை என சீனா கருத்து தெரிவித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மேலும் இப்பகுதியின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரி வந்தன. இந்த …
Read More »வேலையில்லா பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காணப்பட வேண்டும்: சம்பந்தன்
அரச நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லாப் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கு …
Read More »வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு: இறுதி அறிக்கை தயார்
வட. மாகாண அமைச்சர்கள் மீதான முறைகேட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்துவந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையின் 93ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. அதன்போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். சபை அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர், வட. மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுகள் குறித்து …
Read More »அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்ற நடவடிக்கை: நீதியமைச்சர்
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை கொழும்பிற்கு மாற்றுவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் காலதாமதமாவதாகவும், …
Read More »விபுலானந்தரின் 125ஆவது ஜனன தின நிகழ்வுகள் நாளை மட்டக்களப்பில்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125ஆவது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவரும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருமான க.பாஸ்கரன் தெரிவித்தார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விழாச் சபையின் தலைவர் க.பாஸ்கரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். …
Read More »மட்டக்களப்பில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திச் சந்தை திறந்து வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும், அவர்களது வியாபார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் மாபெரும் கண்காட்சியும், விற்பனையும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான வீ எபெக்ட் (We Effect) ) நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட இணைப்பாளர் ரீ. மயூரன் தெரிவித்தார். ஒன்பதாவது வருடமாக இத்தகைய பெண்களை ஊக்குவிக்கும் சந்தைக் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறுவதாக அவர் மேலும் …
Read More »வான் எல்லைக்குள் பறந்த வடகொரியா மர்ம பொருள் மீது தென்கொரியா துப்பாக்கி சூடு
வான் எல்லைக்குள் பறந்த வடகொரியா மர்ம பொருள் மீது தென்கொரியா துப்பாக்கி சூடு நடத்தியது. எந்திர துப்பாக்கியால் 90 ரவுண்டு சுட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே 2 அணுகுண்டு சோதனைகள் மற்றும் பல ஏவுகணைகள் சோதனைகளும் நடத்தி உள்ளன. இதற்கு அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா, ஐ.நா. சபை உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து …
Read More »வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்தார் அதிபர் டிரம்ப்
ரோம் நகர் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபின் முதன் முறையாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அத்துடன் வாடிகன் சென்று போப் ஆண்டவரை சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி சவுதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இத்தாலி வருகை தந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் செர்ஜியோ மேட்டரல்லா, …
Read More »ஜனாதிபதியின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்! – ஹக்கீம்
ஜனாதிபதியின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதெனவும், இது தொடர்பில் பொலிஸாரும் அசமந்தமாகவே செயற்பட்டனர் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்றைய (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்தோடு, அண்மைய காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுச் செல்கின்ற இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள …
Read More »கடந்த ஆட்சிக்கால அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது: சம்பந்தன்
கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். அண்மைக்காலமாக தொடரும் சிறுபான்மையினங்களின் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும். கடந்த ஆட்சியில் இந்நிலைமைகள் மிகவும் மோசமாக காணப்பட்டன. …
Read More »