Monday , October 20 2025
Home / செய்திகள் (page 348)

செய்திகள்

News

நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வராவிட்டால்… மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்

திண்டுக்கல்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனில் எடப்பாடி ஆட்சியை அகற்ற மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலை அருகே …

Read More »

தாயக மண்ணில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது திலீபனின் நினைவேந்தல் வாரம்!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைதிப் படையாகக் காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வு தாயக மண்ணில் நேற்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வார நிகழ்வு நல்லூர் தெற்கு வீதியில் …

Read More »

போருக்கு காத்திருக்கும் ரஜினி… புதிய கட்சி துவங்குகிறார் கமல் !

புதிய கட்சி துவங்குவது பற்றி யோசித்து கொண்டிருப்பதாக உலகநாயகன் கமல் ஹாசன் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் ஆங்கில இதழுக்கு தனது அரசியல் பிரவேசம் குறித்து அளித்துள்ள பேட்டியில், எனக்கும் அரசியல் சிந்தனை உள்ளது எனது சிந்தனையுடன் எந்த அரசியல் கட்சியும் ஒத்து போகவில்லை. நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளேன் ஆனால் எந்த கட்சியிலும் சேரும் எனக்கு இல்லை. அரசியலில் புதிய …

Read More »

செல்போனை உடைத்ததால் நண்பனை கொலை செய்த சிறுவன்!

திருவாரூர் அருகே செல்போனை உடைத்ததால் 8-ம் வகுப்பு மாணவனை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் மாஜித் முகமது என்ற மாணவன் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்த அபுல் கலாம் ஆசாத் என்ற 15வயது சிறுவனும், மாஜித் முகமது இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு …

Read More »

லண்டன் சுரங்க ரெயிலில் குண்டுவெடிப்பு : 22 பேர் படுகாயம்

லண்டன் தாக்குதல் - சமீபத்திய செய்திகள்

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 08:20 மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து சுரங்க ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தாக்குதல் பயங்கரவாத …

Read More »

ஐ.நா. ஆணையாளரின் இறுதி எச்சரிக்கையை மனதார வரவேற்கின்றது கூட்டமைப்பு! – அரசு மந்தப் போக்கில் தொடர்வது மாபெரும் தவறு எனவும் சுட்டிக்காட்டு

இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்றுள்ளது. இனியும் விதண்டாவாதக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்காமல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுத் தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. “சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு …

Read More »

ஐ.நா. ஆணையாளரின் கருத்து அபத்தமானது! – அடியோடு நிராகரிக்கின்றது இலங்கை அரசு

இலங்கை அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள இலங்கை அரசு, இவை அபத்தமானதும், அபாண்டமானதெனவும் சாடியுள்ளது. “சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன், 36ஆவது கூட்டத்தொடரின் …

Read More »

ஐ.நா. உரை குறித்து அமைச்சரவையில் மைத்திரி விளக்கம்!

அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 26ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 17ஆம் திகதி அமெரிக்கா செல்லவிருப்பதால் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமல் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மேற்படிக் கூட்டத்தை நடத்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துக்குச் செல்வது மற்றும் அந்த விஜயம் குறித்து ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது சிறிய விளக்கமொன்றை அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

Read More »

புதிய அரசமைப்பு தொடர்பில் சம்பந்தன் – தினேஷ் சந்திப்பு! – விரைவில் கூட்டுப் பேச்சுக்கும் ஏற்பாடு

பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்குமிடையில் விரைவில் முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது. பொது எதிரணியின் அழைப்பின்பேரில் இந்தப் பேச்சு கொழும்பில் நடைபெறவுள்ளது எனவும், இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட பல விடயங்கள் ஆராயப்படும் எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இந்தப் பேச்சுக்கான அழைப்பை விடுத்துள்ளார் …

Read More »

இலங்கையில் 81 சிறுவர்கள் உட்பட 2,688 பேருக்கு எயிட்ஸ்!

இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டு முடிவில் நாட்டில் மொத்தமாக 2,688 பேருக்கு எயிட்ஸ் நோய் பீடித்திருக்கின்றது எனவும், அவர்களில் 81 பேர் சிறுவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் பால்வினை நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த 2,688 நோயாளிகளில் ஒருவர் மாத்திரம் மரணமடைந்துள்ளார். இலங்கையில் எயிட்ஸ் நோய் வெகுவாகக் குறைந்திருந்தபோதிலும் அது இப்போது படிப்படியாக அதிகரித்துவருகின்றது. மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவை வைத்துக்கொள்வதே இந்த …

Read More »