Saturday , August 23 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 21)

இந்தியா செய்திகள்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியுடன் சந்திப்பு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் இன்று மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த 14–ந் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை …

Read More »

வட மாநிலத்தவர்களின் புத்தாண்டு உகாதி பண்டிகை – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து

வட மாநிலத்தவர்களின் புத்தாண்டாக கொண்டாடப்படும் உகாதி பண்டிகையையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வட மாநிலங்கள் மற்றும் தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டாக யுகாதி திருநாள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் யுகாதி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா …

Read More »

ராம்ஜெத்மலானி கேரள மருத்துவமனையில் திடீர் அனுமதி!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கேரளாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானிக்கு (94) இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மதியம் 12.45 மணிக்கு கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More »

மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் – போப் பிரான்சிஸ் ஒப்புதல்

மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சிக்கு அருகிலுள்ள புல்லுவழி என்ற ஊரில் 1954-ம் ஆண்டு பிறந்தவர் ராணி மரியா. இவர் 1972-ல் கிடங்கூரில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரட் துறவற சபையில் சேர்ந்து கன்னியாஸ்திரி ஆனார். 1975-ல் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூருக்கு அனுப்பப்பட்டார். 1980-ல் கன்னியாஸ்திரியான இவர், 1992ல் மத்திய பிரதேச மாநிலம் உதய்நகருக்கு பணியாற்ற …

Read More »

எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்தியா போரை சந்திக்கும் – ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத்

முன்பு போல் இல்லாமல் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்தியா போர்களை சந்திக்கும் என ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற ராணுவம் சார்ந்த அறிக்கை தொகுப்பு வெளியீட்டு விழாவில் ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். அப்போது ராணுவ வடிவமைப்பு பிரிவின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் இரண்டாவது தொகுப்புகளை வெளியிட்டு பேசிய அவர் ,” முன்பு போல் இல்லாமல் வரும் காலங்களில் …

Read More »

தெலுங்கானா மாநில சட்டசபையில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இருந்து சஸ்பெண்ட் – தெலுங்கானா பா.ஜ.க கட்சியினர் கண்டனப் பேரணி

தெலுங்கானா மாநில சட்டசபையில் இருந்து பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து அக்கட்சியினர் இன்று கண்டனப் பேரணி நடத்தினர். தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு விகிதத்தை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 5 பேரையும் இரண்டு நாட்கள் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டார். சபாநாயகரின் இந்த …

Read More »

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைஅச்சர் அருண்ஜெட்லியிடம் விஷால், பிரகாஷ் ராஜ் கோரிக்கை

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைஅச்சர் அருண்ஜெட்லியிடம் விஷால், பிரகாஷ் ராஜ் கோரிக்கை வைத்தனர். வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் …

Read More »

12 வயது சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுவன் ஒருவன் தந்தை

12 வயது சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 12 வயது சிறுவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 17 வயது சிறுமியுடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தை பிறந்து உள்ளது. இவர்கள் இருவருமே உறவினர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே இளம் வயது தந்தையாக இச்சிறுவன் கருதப்படுகிறான். இதுகுறித்து திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்து கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் பி.கே. ஜப்பார் கூறியதாவது, இச்சிறுவன் இந்த வயதிலேயே …

Read More »

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம்

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானம்

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் அவசர அவசரமாக லண்டனில் தரையிறக்கப்பட்டது. லண்டன் வழியாக அமெரிக்காவின் நெவார்க் நகருக்கு செல்லும் ஏர்இந்தியாவின் ஏஐ 171 விமானம் நேற்று 230 பயணிகளுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் மூக்குப் பகுதியில் பறவை ஒன்று மோதியது. இதனால் விமானத்தின் முன்பகுதியானது சேதம் அடைந்தது, ரேடார் சேதம் அடைந்தது. இதனையடுத்து விமானம் லண்டன் …

Read More »

இலங்கை அரசுக்கு கால அவகாசம்: இந்தியா ஆதரவு! – சுஷ்மா தெரிவிப்பு

இலங்கை அரசுக்கு கால அவகாசம்: இந்தியா ஆதரவு! - சுஷ்மா தெரிவிப்பு

இலங்கை அரசுக்கு கால அவகாசம்: இந்தியா ஆதரவு! – சுஷ்மா தெரிவிப்பு 2015இல் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதனை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் டுவிட்டரில் …

Read More »