Saturday , August 23 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / ஓசூர் அருகே கோர விபத்து

ஓசூர் அருகே கோர விபத்து

ஓசூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பேருந்தின் மீது மோதியதில் மாணவர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் சென்னையில் இருந்து ஓசூருக்கு ஹோண்டா சிட்டி காரில் 5 பேர் சென்று கொண்டிருந்தனர். நேற்று மாலை ஓசூரை அடுத்த சூளகிரி அருகே கார் வந்தபோது காரின் டயர் திடீரென்று வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பேருந்து தாறுமாறாக ஓடி அருகிலிருந்த 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் வந்த 5 பேரும், பஸ் கண்டக்டரும் பலியானார்கள். மணீஸ்குமார்(21), பிளஸ்-2 மாணவர் சஞ்சய்குமார் (17) , பிளஸ்-1 மாணவர் ஆதர்ஷ் (16), ஆகாஷ் (16), இசக்கியான் (16), கோவிந்தராஜ் (55) அரசு பஸ் கண்டக்டர். பஸ்சில் இருந்த 27 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv