Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / யேர்மன் தலைநகரில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 நிகழ்வு.

யேர்மன் தலைநகரில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 நிகழ்வு.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 63 தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில் யேர்மன் தலைநகரில் வரலாற்றுமிக்க சதுக்கத்தில் ( Brandenburger Tor முன்பாக ) தமிழ் இளையோர்கள் , தமிழின உணர்வாளர்கள் கேக்(குதப்பி) வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர்.

தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 63 எழுச்சியாகவும், எளிமையாகவும் கொண்டாடப்பட்டதுடன் நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறுவர்களின் கவிதைகளும் வழங்கப்பட்டது.இறுதியாக தமிழீழத் தேசியத் தலைவரின் தமிழ் மக்களுக்கான உயரிய நோக்கத்தை வென்றெடுக்க உறுதியெடுக்கப்பட்டு இனிதே நிகழ்வு நிறைவுபெற்றது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv