கொலம்பியாவில் எருது சண்டையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் காயம்
கொலம்பியாவில் எருது சண்டையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பிரிக்க நாடான கொலம்பியா தலைநகரில் எருது சண்டை நடந்தது. ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்த கடந்த மாதம் தான் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று போகோடாவில் எருது சண்டை போட்டி நடந்தது. அதை பார்க்க ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வெடி குண்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் 26 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 24 போலீசார் அடங்குவர்.