Sunday , August 24 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ​கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

​கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

​கார் குண்டு வெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

ஈராக் நாட்டின் பாக்தாத் நகர் அருகே கார் குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். குண்டு வெடிப்பால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

மொசூல் நகரில் கட்டுப்பாட்டை இழந்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அண்மைக்காலமாக பாக்தாத் நகரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திவருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

World News

Srilanka News

Tamilnadu News

Video News

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …