“எங்கள் வளர்ச்சியை தடுக்கவே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் கூட, எங்கள் சின்னத்தை தெளிவாக பதிவிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர்” என சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்ததாவது,
“தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க-வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்தே போட்டியிட்டு களம் கண்டதால், நாம் தமிழர் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது.
இம்முறை தேர்தலில் நாங்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம். எங்களுடைய விவசாயி சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து விட்டோம்; ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் எங்கள் சின்னம் மங்கலாக உள்ளது.
சுயேச்சை சின்னம் கூட மிகவும் தெளிவாக தெரிகின்றது. இதன்மூலம் எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது. தமிழகம் முழுவதும் மக்கள் எங்களை ஆதரித்து வருகின்றனர்.
அதனால், நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், ஆளும் அதிகார வர்க்கத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் அடிபணிந்து விட்டது.
நாட்டை காக்கவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளில் செயற்படும் எங்களைப் போன்ற கட்சிகள் வளர்ந்துவிடக்கூடாது என்றே முக்கிய சில கட்சிகள் நினைக்கின்றன.