Thursday , August 21 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / பாஜக மதவாத அரசியல் செய்கிறதா ?

பாஜக மதவாத அரசியல் செய்கிறதா ?

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜிஎஸ்டி யை எதிர்த்த பலர் தற்பொழுது அதனால் தமிழகத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதால், ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாஜக மதவாத கட்சி என கூறும் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தபோது ஏராளமான ஊழல்களை செய்துள்ளனர். அப்போது தான் ஈழத்தில் தமிழர்கள் குவியல் குவியலாய் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனை ஏன் மத்தியில் இருந்த காங்கிரஸும், தமிழகத்தை ஆண்ட திமுகவும் கண்டுகொள்ளவில்லை.

21 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கும் பாஜக மதவாத அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv