Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. அதிமுக வேட்பாளராக மதுசூதனன், திமுக வேட்பாளராக மருதுகணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் சுயேட்சைகளாக தினகரன் மற்றும் தீபா ஆகியோர்களும் போட்டியிடவுள்ளனர்.

இந்த நிலையில் பாஜக சார்பில் பிரபலமான வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் என்று அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். ஆனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தினம் இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் யார்? என்று அறிவிக்கப்படாமல் இருந்தது

இந்த நிலையில் ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று தமிழிசை செளந்திரராஜன் அறிவித்துள்ளார். கரு.நாகராஜன் என்பவர் யார் என்பதே பலருக்கு தெரியாத நிலையில் தமிழகம் முழுவதும் அவர் பிரபலமானவரா? என்பதை தமிழிசை தான் விளக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv