கொழும்பில் பிரமாண்ட போராட்டம்
இலங்கை அதிபர், ஆசிர்களின் 30 தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பது, அதிகப்படியான பணிச்சுமையைக் குறைப்பது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதத்தை கல்விக்காக ஒதுக்குதல் ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கலாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்ண்டெக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்ல முயன்றதால், லோட்டஸ் வீதி மூடப்பட்டது.
அத்துடன் போராட்டத்தை கட்டுப்படுத்த தயாராக கலகம் அடக்கும் பொலிசாரும், நீர்த்தாரை பிரயோக வாகனமும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.