பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தொடங்கியது முதலே சண்டை தான். கார்கிலை நினைவு கூறும் வகையில் இரு அணிகளாக பிரிந்து ஆளுக்கொரு ஏரியாவை கைப்பற்றி வருகின்றனர்.
இதனால் நேற்று மும்தாஜ் அழுதது அனைவரும் அறிந்ததே. இன்று வந்த ப்ரோமோவில் ஒருவர் கொடியை மற்ற அணியினர் பிடுங்கி தங்கள் கொடியை நாட்டலாம் என்று டாஸ்க் உள்ளது போல.
இதற்காக மஹத், யாஷிகா, சென்றாயன் என பலரும் கட்டி உருண்டு சண்டை போட்டு வருகின்றனர். கடந்த சீசனிலும் இதுபோன்ற சண்டையில் தான் சினேகன், சுஜாவுக்கும் இடையே பிரச்சனை அதிகமானது.