பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
விஜய்பார்கவி எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கதாநாயகி மற்றும் இதர கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.