Sunday , August 24 2025
Home / சினிமா செய்திகள் / புழல் சிறை, பண மோசடி, வழக்கு- ஐஸ்வர்யாவின் பின்னணியில் வந்த திடுக்கிடும் தகவல்

புழல் சிறை, பண மோசடி, வழக்கு- ஐஸ்வர்யாவின் பின்னணியில் வந்த திடுக்கிடும் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர் ஐஸ்வர்யா. பெங்காலி பெண்ணான இவர் பேசும் கொஞ்சும் தமிழ் மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றது.

தற்போது அவரை பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் தெரிந்தவர் யாருக்காவது போன் செய்து பேசலாம் என போட்டியாளர்களுக்கு சொல்லப்பட்டது. அதில் ஐஸ்வர்யா போன் செய்த நபர் கோபி. அந்த கோபி யார் என்ற விவரம் மக்களை ஷாக் ஆக்கியுள்ளது.

கோபி கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிய குற்றச்சாட்டில் கைதாகி, சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்திருக்கிறார். நிதி நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாக நூற்றுக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாயைச் சுருட்டியதாகக் கைது செய்யப்பட்டார். அவர் பண மோசடி செய்ய வைத்திருந்த கம்பெனியில் ஐஸ்வர்யாவும் ஒரு பார்ட்னராக இருந்துள்ளார்.

இந்த தகவலை பண மோசடியால் ஏமாற்றப்பட்ட ஒரு நபர் வெளியிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv