ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. பேச்சு
பாராளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவை இன்று நடைபெற்றது.
இந்நிலையில், அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த் மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில் ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.