Thursday , October 16 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஆசி­ரியையின் கூந்­தலை அறுத்­துக் கொடுமை கொக்­கு­வி­லில் சம்­ப­வத்தின் பின்னனி

ஆசி­ரியையின் கூந்­தலை அறுத்­துக் கொடுமை கொக்­கு­வி­லில் சம்­ப­வத்தின் பின்னனி

யாழ்ப்­பா­ணம் – கொக்­கு­வில் பகு­தி­யி­லுள்ள வீடொன்­றுக் குள் புகுந்த இரு­வர் அங்­கி­ருந்த நடன ஆசி­ரி­யை­யும் அவ­ரது தாயா­ரை­யும் கத்­தி­யால் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­விட்­டுத் தப்­பிச் சென்­ற­னர். படு­கா­ய­ம­டைந்த ஆசி­ரி­யை­யும், தாயும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டனர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­றுப் பிற்­ப­கல் 2.45 மணி­ய­ள­வில் கொக்­கு­வில் மூன்­றாம்­கட்­டை­யில் (தாவ­டிக்கு அண்­மை­யில்) நடந்­துள்­ளது.
மோட்­டார் சைக்­கி­ளில் வந்த இரு­வர் வீட்­டுக்­குள் நுழைந்து தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர்.

ஆசி­ரி­யை­யின் கூத்­தலை வெட்­டிக் அவ­ரைக் கொடூ­ர­மா­கக் கொடு­மைப்­ப­டுத்­தி­னர். அவ­ரைக் கத்­தி­யால் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். தாக்­கி­ய­வர்­க­ளைத் தடுக்­கச் சென்ற ஆசி­ரி­யை­யின் தாயை­யும் அவர்­கள் வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். தாக்­கு­தலை நடத்­தி­விட்டு இரு­வ­ரும் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

கடும் காயங்­க­ளுக்கு உள்­ளான ஆசி­ரி­யை­யும், தாயை­யும் அய­ல­வர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­த­னர். சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸா­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

தாக்­கு­த­லா­ளி­க­ளின் இலக்கு ஆசி­ரியை இல்லை என்­றும், அவ­ரது தங்­கையே என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். ஆசி­ரி­யை­யின் தங்கை சம்­ப­வத்­தின்­போது வீட்­டில் இருந்­துள்­ள­னர். அவர் சுதா­ரித்­துக்­கொண்டு ஒளிந்து கொண்­ட­தால் தப்­பிக்­கொண்­டுள்­ளார்.

வெளி­நாட்­டில் உள்ள ஒரு­வ­ருக்­கும் இந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வத்­தில் தொடர்­பி­ருக்­க­லாம் என்று பொலி­ஸார் சந்­தே­கிக்­கிக்­கின்­ற­னர்.

சுவிஸ் நாட்­டி­லி­லுள்ள தனது கண­வ­ரின் முதல் மனை­வியே தாக்­கு­த­லுக்­குக் கார­ணம் என்று ஆசி­ரி­யை­யின் தங்கை விசா­ர­ணை­யின்­போது தெரி­வித்­துள்­ளார். சில தினங்­க­ளுக்கு முன்­னர் அவர் தன்­னைத் தொடர்­பு­கொண்டு திரு­மண முறி­வுப் பத்­தி­ரத்­தில் கையெ­ழுத்­திட வேண்­டும் என்று அச்­சு­றுத்­தி­னார் என்­றும் அது தொடர்­பில் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அவரே கூலிக்கு ஆள்­களை வைத்­துக் கொல்ல முயற்­சித்­தி­ருக்­க­லாம் என்­றும் ஆசி­ரி­யை­யின் தங்கை விசா­ர­ணை­யில் தெரி­வித்­துள்­ளார்.

தாக்­கு­த­லா­ளி­கள் அந்­தப் பகு­தி­யில் உள்ள பாது­காப்­புக் கமரா ஒன்­றில் பதி­வா­கி­யுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நேற்று கொக்­கு­வில் பகு­தி­யில் உள்ள கடை­யொன்­றில் கத்தி வாங்­கிக் கொண்டு ஆசி­ரி­யை­யின் வீட்­டுக்­குச் சென்று தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர் என்­ப­தும் விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது. அவர்­கள் பயன்­ப­டுத்­திய மோட்­டார் சைக்­கிள் வவு­னிய மாவட்­டத்­தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­வித்த பொலி­ஸார் சந்­தே­க­ந­பர்­கள் இன்று கைது செய்­யப்­ப­ட­லாம் என்­றும் தெரி­வித்­த­னர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv