Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரி-மஹிந்த பேச்சுவார்த்தையில் பசில் புறக்கணிப்பு

மைத்திரி-மஹிந்த பேச்சுவார்த்தையில் பசில் புறக்கணிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜக்ஷ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் பசில் ராஜபக்ஷ இடம்பெறாதமைக்கு ஸ்ரீ.ல.சு.க. விளக்கமளித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தொடர்பில் பசில் ராஜபக்ஷ எந்தவித இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி, எதிர்க் கட்சித் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் ஏன் கலந்துகொள்ளவில்லையென தன்னால் கூற முடியாது எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தையில், கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக அதிருப்தியடைபவர்களும் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும் குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்தது எனவும் இக்கூட்டணியின் குறித்த எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜக்ஷ ஆகியோர் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv