Saturday , August 23 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / அமெரிக்காவில் மீண்டும் வருகிறது கொடூர தண்டனை.. டிரம்ப் அதிரடி?

அமெரிக்காவில் மீண்டும் வருகிறது கொடூர தண்டனை.. டிரம்ப் அதிரடி?

அமெரிக்காவில் மீண்டும் வருகிறது கொடூர தண்டனை.. டிரம்ப் அதிரடி?

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப் மீண்டும் வாட்டர்போர்டிங் எனப்படும் கொடூர சித்ரவதை விசாரணையை அறிமுகப்படுத்தப்படும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப், தன்னுடைய முதல் நாளில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறார். அவரின் சில அதிரடி நடவடிக்கைகள் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக வாட்டர் போர்டிங் எனப்படும் கொடூர சித்ரவதை விசாரணை அறிமுகபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அல்கொய்தா இயக்கத்தினர் பென்டகன் இராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீதும் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3,000 மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தார். அதில் ஒன்றுதான் வாட்டர்போர்டிங் சித்ரவாதை விசாரணை.

அதாவது இந்த விசாரணைக்கு உட்படுவோர் தலை சாய்தளத்தில் கீழ்நோக்கி தொங்குமாறு வைக்கப்படும். பின்புறம் அசைய முடியாமல் கம்பியால் பிணைக்கப்பட்டிருக்கும். பின்னர் மூக்கில் மூச்சு விடமுடியாத அளவுக்கு தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் தண்ணீரில் மூழ்கடிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இதனால், நுரையீரல் சேதம், மூளை பாதிப்பு போன்றவை ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும். மூச்சு விடுவதற்காக அந்த மனிதன் போராடும்போது, உடலில் காயங்கள் ஏற்படும். சில் நேரங்களில் உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

இந்த விசாரணைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒபாமா இதை தடை செய்தார்.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

எனவே நானும் வாட்டர்போர்டிங்’ சித்ரவதை முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து தீவிரமாக பரிசீலித்துக்கொண்டிருக்கிறேன். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …