கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு அருகில் சிசுவொன்று மீட்கப்பட்டது.
மருத்துவமனைக்கு அருகில் இன்று சிசுவைக் கண்ட மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அதன் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், சிசுவை மீட்டு மருத்துவனையில் ஒப்படைத்துள்ளனர்.
தற்போது சிசு நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
கைவிடப்பட்ட சிசுவின் தாயை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.