தெற்காசிய பிராந்திய வலயத்தில் ஏற்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியமாகும் என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையே டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய …
Read More »மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனைக்கு தடை
மத்திய மாகாணத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்வது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால்,பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மாவட்டத்தில் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மத்திய மாகாண …
Read More »வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்
சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நடத்திய பேச்சுக்களின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களின் போது, மூன்று பிரதான வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்து தருமாறு …
Read More »முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போலவே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கி …
Read More »நாங்கள் வெற்றி பெற்றால் தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்வோம்: தொழிலாளர் கட்சி அறிவிப்பு
பிரிட்டன் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால், அரசு கொண்டு வந்துள்ள பிரெக்சிட் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய பிரெக்சிட் கொள்கையை வகுப்பதாக தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது பிரிட்டனில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ல் முடிவடைகிறது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்னரே, அதாவது ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரசா மே முடிவு செய்து நேற்று அறிவிப்பை …
Read More »வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ள ஏவுகணை எதிர்ப்பு கவன் அமைப்பதில் அமெரிக்கா தீவிரம்
ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில் வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணை தடுப்பு கவன் அமைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச …
Read More »அமெரிக்காவில் 17 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிகழ்வு 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் அமெரிக்காவில் மரண தண்டனை விஷ ஊசி போட்டு நிறைவேற்றப்படுகிறது. அத்தகைய தண்டனை ஒரு நாளில் ஒருவருக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தெற்கு மாகாணமான ஆர்கன்சாசில் ஒரே நாள் இரவில் 2 …
Read More »புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பிரித்தானியாவுடன் கூட்டமைப்பு பேச்சு
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரீஸுடன், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துரையாடியுள்ளார். கூட்டமைப்பிற்கும், பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம், இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் …
Read More »ஜனநாயக போராட்டத்திற்கு மதிப்பளிக்காவிடின் தமிழினம் வேறு வழியை கையாளும்
மனிதாபிமான போராட்டம் தீர்வின்றி தொடருமாயின், அது எமது இனத்தவரை வேறு வழிக்கு திசைதிருப்புவதற்கே வழிவகுக்கும்” என கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 66ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தையொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய அவர், “இந்த ஜனநாயக …
Read More »தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு
தந்தை செல்வநாயகத்தின் 40ஆம் ஆண்டு நினைவு தினம் வுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள நினைவுத்தூபியில், இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், …
Read More »
Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Global Tamil News,Daily Tamil News, Sri Lankan News,india breaking news,Tamil online news,Tamil website,Tamil Daily News Website,Sri Lanka News Online,sri lanka news, tamil news, tamil web site,tamil news site,latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news,top news, lifestyle news, daily news update,தமிழ் செய்தி,இலங்கை செய்தி,சிறிலங்கா,இலங்கை செய்திகள்,இலங்கை தமிழ் செய்திகள்,இலங்கை செய்தி,தமிழ் செய்திகள்,tamil news today,tamil news cinema,tamil news daily,tamil news for today,tamil news jaffna,Tamil News Paper,tamil news paper,tamil news paper,Jaffna news,jaffna news today