Friday , November 15 2024
Home / குமார் (page 21)

குமார்

பெண் குழந்தைளுக்கான கல்வி உரிமையை ஊக்குவிப்பதற்காக ஐ.நா சபையின் அமைதித் தூதராக மலாலா யூசுப்சாய் நியமனம்

உலகம் முழுவதுமுள்ள பெண் குழந்தைளுக்கான கல்வி உரிமையை ஊக்குவிப்பதற்காக ஐ.நா சபையின் அமைதித் தூதராக மலாலா யூசுப்சாய் நியமிக்கப்பட உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய், பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பின்னர், பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிர் பிழைத்த அவர், அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே …

Read More »

6 ஆயிரம் வழக்குகளை தீர்வு செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் கின்னஸ் சாதனை

ஓரே ஆண்டில் 6 ஆயிரம் வழக்குகளை தீர்வு செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்ட நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி வரும் தேஜ் பிரதாப் சிங், கடந்த ஆண்டில் 327 வேலை நாட்களில் 6,065 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இடையில், அம்மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்திய போதிலும் அசராமல் …

Read More »

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை தொடர்புடைய ஆவணங்கள் வெளியாகின

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை தொடர்புடைய ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் நேற்று வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பல ஆவணங்கள் இன்று வெளியாகியுள்ளன. இந்த ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. பணப்பட்டுவாடா தொடர்புடைய ஆவணங்களும் வெளியாகியுள்ளன. ஆவணத்தில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், வாக்காளர் ஒவ்வொருவருக்கும் ரூ.4 ஆயிரம் வழங்க இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …

Read More »

மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – 10 நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 10 நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் தொடர்ந்து …

Read More »

சிரியா விமானப்படை தளம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்காவுக்கு ரஷியா கண்டனம்

சிரியா நாட்டின் விமானப்படை தளத்தின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷிய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள …

Read More »

முக்கிய ஆவணங்களை எடுத்து ஓடிய விஜயபாஸ்கர் கார் டிரைவர் பிடித்து உதைத்த சிஆர்பிஎப்

வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணத்தை அவரது கார் டிரைவர் எடுத்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் …

Read More »

ஆர்.கே.நகர் தொகுதி – ஓ.பன்னீர்செல்வத்துக்கு 4 சுயேச்சை கட்சி வேட்பாளர்கள் ஆதரவு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு சுயேட்சை கட்சி வேட்பாளர்கள் 4 பேர் ஆதரவு தெரிவித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு சுயேட்சை வேட்பாளர் கணேசன் ஆதரவினை தெரிவித்ததோடு, ஆர்.கே.நகர் தொகுதி 47-வது வட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டிராஜனுடன் இணைந்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கனவே ரேணுகாதேவி, பத்மராஜன், மஞ்சுளா ரவிகுமார் ஆகிய 3 …

Read More »

ஹன்ஸ்ராஜ் வர்மா, ராஜ் துறை, நிரஞ்சன் மார்டி ஆகியோருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து உயர்வு – தமிழக அரசு உத்தரவு

ஹன்ஸ்ராஜ் வர்மா, ராஜ் துறை, நிரஞ்சன் மார்டி ஆகியோருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து உயர்வு கொடுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறை மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் பி.டபிள்யூ.சி. டேவிதார், கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் …

Read More »

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் இருக்கும் அமைச்சர் மீது நடைபெற்றுள்ள இந்த வருமான வரிச்சோதனையை வரவேற்கிறேன். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை …

Read More »

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் 50 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.4.5 கோடி ரொக்கபணம் பறிமுதல்

50 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.4.50 கோடி வீட்டில் ரொக்கபணம் பறிமுதல் செய்யபட்டு உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. 3 அணிகளாக களம் காண்கிறது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தேர்தல் களத்தில் எதிரும்புதிருமாக மோதி வருகிறார்கள். தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து சென்னை வந்துள்ள அ.தி.மு.க.வினர் எழும்பூர் கென்னத் லேனில் உள்ள நியூ லட்சுமி லாட்ஜில் தங்கியுள்ள னர். இன்று காலையில் வரு மான வரித்துறை அதிகாரி …

Read More »